follow the truth

follow the truth

November, 22, 2024
Homeகட்டுரைCOVID-19 ஜனநாயகத்தையும் அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்ய கோருகின்றது : குசல் பெரேரா

COVID-19 ஜனநாயகத்தையும் அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்ய கோருகின்றது : குசல் பெரேரா

Published on

இந்த தொற்றுநோய் காலத்தில் இலங்கையில் உள்ள முதலாளிகளால் சுதந்திர வர்த்தக வலய (FTZ) தொழிலாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் சுரண்டப்படுவது பற்றிய பல பரபரப்பான கதைகள், இங்கேயும் சுற்றி வளைத்து எமது கரைகளையும் தாண்டி பயணித்தன. இந்த கதைகள் பெரும்பாலும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மற்றும் ஆடை துறை தொழிலாளர்கள் பற்றியது. கொழும்பிலும் கட்டுநாயக்கவிலும் உள்ள பல கூட்டணிகள் (சில தொழிற்சாலை தளங்களில் உண்மையான உறுப்பினர் அடிப்படை இல்லாமலும்) சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களின் துயரங்களை வெளிப்படுத்துகின்றன. இந்த கதைகள் பிராந்திய பிரச்சாரங்களில் சிக்கியுள்ளன, பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் தற்போதைய தொற்றுநோய்க்கு மத்தியில் இதே போன்ற கஷ்டங்களையும் உயிருக்கு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றனர்.

இலங்கையில், தொழிற்சங்கங்களுக்கு வெளியே சமீபத்திய “உரிமை பிரச்சாரகர்கள்” கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் பிரச்சினைகளை ஊதிப் பெரிதாக்க முயன்றனர். 5,000 கோவிட்-19 பாதிப்புகள் போன்ற தன்னிச்சையான எண்கள் ஒரு காலத்தில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்;கு மட்டும் மேற்கோள் காட்டப்பட்டது. இதற்கிடையில், முதலாளிகள் அவர்களது 74 % க்கும் அதிகமான சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி மற்றும் 90 மூ வீதமானவர்களுக்கு முதல் தடுப்பூசி போட்டதாக கூறுகின்றனர். சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் ஆடைத் துறைகளில் மேற்கோள் காட்டப்பட்ட எண்கள் எப்போதும் யார் எந்த நோக்கத்திற்காக மேற்கோள் காட்டுகிறார்கள் என்பதைப் பொருத்து எதேச்சையான இலக்கங்களாக காணப்பட்டது.

இலங்கை முதலீட்டுச் சபை, ஆடைத் துறை வேலைவாய்ப்பு என்பது இலங்கையின் பணியாளர்களில் 15 சதவிகிதம் என்று கூறுகிறது எனினும், இலக்கம் எதுவும் வழங்கப்படவில்லை. குறிப்பிடப்பட்டுள்ள “பணியாளர்” என்பதற்கு தெளிவான விளக்கம் இல்லை. “மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் துறை” யில் கொடுக்கப்பட்ட நகர்ப்புற மற்றும் கிராமப்புறத் துறைகளில் 15 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்கள் 2019 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி பணியாளராகக் கருதப்பட்டு இருந்தால் ஆடைத் துறை வேலைவாய்ப்பு 1.23 மில்லியனாக இருக்கும். ஆயினும் கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம் (JAAF) 300,000 நேரடி வேலைவாய்ப்புடன் 600,000 மறைமுக வேலைவாய்ப்புகளைக் கோருகிறது. இந்த எண்கள் எப்போதுமே ஒழுங்கற்றவையாகவும் எப்போதும் துல்லியமற்றவையாகவும் காணப்படுகின்றன.

கட்டுநாயக்கவுக்கு அப்பால் தொற்றுநோய்

COVID-19 தொற்றுநோயின் அச்சுறுத்தல் எண்களுக்கு மற்றும் கட்டுநாயக்க மற்றும் ஆடை தொழிற்துறைக்கு அப்பாற்பட்டது. கோவிட் -19 தொற்றுநோயின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும், இலங்கை முதலீட்டு வாரியத்தின் கீழ் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் மற்றும் அதற்கு வெளியேயும் உள்ள அனைத்து தொழிலாளர்களின் பாதுகாப்பும் கடுமையாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. மன்னார் (1,357), கிளிநொச்சி (4,636), முல்லைத்தீவு (1,284), கல்முனை (2,782), மற்றும் மட்டக்களப்பு (6,155) போன்ற தொலைதூர மாவட்டங்கள் கூட செப்டம்பர் 05 (2021) வரை கணிசமான எண்ணிக்கையை இந்த மூன்றாவது அலையில் அறிவித்தன.

தொழிற்சாலை ஊழியர்களிடையே முதல் அதிர்ச்சியூட்டும் கோவிட்-19 வைரஸ் தொற்று இடம்பெற்றது கட்டுநாயக்கவில் அலல. இது அக்டோபர் 2020 தொடக்கத்தில் மினுவாங்கொட பிராண்டிக்ஸ் தொழிற்சாலையில் இருந்தது, அதன் பின்னர் கட்டுநாயக்கவைத் தாண்டி வெகுதூரம் பயணித்தது. பாணந்துறை, சீதவாக்க, பிங்கிரியா, கொக்கல, துல்ஹிரிய, ஹசலகவில் உள்ள பல தொழிற்சாலைகள் இந்த மூன்றாவது அலையின் போது கோவிட்-19 பாதிக்கப்பட்ட ஊழியர்களை அறிவித்தது.

இந்த ஆண்டு மே மாதத்தில், ஹாங்காங்கில் உள்ள உயர்தர ஆடை மற்றும் ஜவுளி நிறுவனத்திற்கு சொந்தமான, 1500 பேர் வேலை செய்யும் எஸ்குவேல் கொக்கல தொழிற்சாலையின் தொழிற்சாலை மேலாளரை தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுதலுக்காக காலி மேலதிக நீதவான் மே 31 வரை (2021) 10 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் உடனடி தொடர்புகளின் தகவலை மேலாளர் தடுத்து நிறுத்தியதாகவும், வழங்கப்பட்ட வழிமுறைகளை மீறி தொழிற்சாலை வேலை நேரங்களில் இயங்குவதாகவும் பொது சுகாதார ஆய்வாளர் (PHI) நீதிமன்றத்தில் கூறினார்.

சுகாதார வழிகாட்டுதல்களை மீறியதற்காக இன்றுவரை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சாலை மேலாளரை குற்றம் சாட்டிய முதல் மற்றும் ஒரே நிகழ்வு இதுவாக இருந்தாலும், இதுபோன்ற மீறல்கள் அசாதாரணமானது அல்ல. சிவில் சமூக ஆர்வலர்களின் பார்வைக்கு வெளியே, மாகாணப் பகுதிகளில் சமூக வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் ஊழியர்களுடன் பாதிக்கப்பட்ட பிற தொழிற்சாலைகள் காணப்படவேண்டும்.

மறக்கப்பட்ட வட கிழக்கு தொழிலாளர்களின் நிலை

ஊடகங்களுக்கு தெற்கு சிங்களப் பகுதிகளில் கூட கோவிட் -19 தொற்றுநோய் பற்றிய புலனாய்வுத் தகவல்கள் இல்லை என்றாலும், தொழிற்சாலைகளில் கோவிட் -19 தொடர்பான பிரச்சினைகளுக்காக வன்னி மற்றும் கிழக்கைச் சரிபார்ப்பதில் கொழும்பு ஆர்வலர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஆனால் குறிப்பாக வன்னி மற்றும் கிழக்கு தொழிற்சாலைகளில் உள்ள பணியாளர்கள் தங்கள் சொந்த தொழிற்சாலை தொழிலாளர்களிடையே கூட எந்த “பணியாளர்களுக்கிடையிலான உறவை” உருவாக்க முடியாமல் “அணுக்களாக சிதைக்கப்பட்டிருப்பதை” இருப்பதை நான் கவனிக்கிறேன். ஒழுங்கமைக்கப்பட்ட சமுதாயத்தை சிதைத்து, பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து பணியாற்றும் அரசு எந்திரத்தை 25 வருட நீடித்த யுத்தத்தால், தொழிலாளர் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டு அறிவிக்கப்படாமல் போகிறது.

போரினால் பாதிக்கப்பட்ட, சிதைந்த மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து தொழிலாளர்களைச் சேகரிக்க காணப்பட்ட திறன், முதலீட்டாளர்கள் வன்னி மற்றும் கிழக்கிற்கு செல்வதற்கு ஒரு முக்கிய காரணமாகும். சிவில் நிர்வாகத்தை ஒரு பகுதி செயலிழக்கச் செய்து அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மற்றும் சர்வதேச தொழில் சபை (ILO) மாநாடுகளில் உறுதியளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை புறக்கணித்து, முற்றிலும் அபத்தமான தர்க்கத்தின் அடிப்படையில் நன்கொடையாளர் நிறுவனங்கள் நிதியளிக்கப்பட்ட திட்டங்களுடன், போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

மொத்த தொற்றுநோய் படம் ஒரு சுருக்கத்தில்

பணியிடங்களில் தொற்றுநோய் மொத்த படம் தெளிவாகவும் எளிதில் புரிந்துகொள்ளப்படவும் சில சிக்கல்கள் இங்கு வலியுறுத்தப்பட வேண்டும். முதலாது ஒரு வருடம் ஆறு மாதங்கள் முலுவதும், முதலாளிகளோ அல்லது தொழிலாளர் திணைக்களமோ கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டுவதை விட தொழிற்சாலைகளை செயல்பாட்டில் வைத்திருக்கவே அதிக ஆர்வம் காட்டினார்கள். தொழிலாளர் அமைச்சகத்தில் மே மற்றும் டிசம்பர் 2020 இல் “கோவிட் -19 தொடர்பான தொழிலாளர் பிரச்சினைகள் குறித்த முத்தரப்பு பணிக்குழு” நிறுவப்பட்டு எடுக்கப்பட்ட இரண்டு முடிவுகளை அவர்கள் புறக்கணித்தனர். ஒன்று, வேலைக்கு அழைக்கப்படாத தொழிலாளர்களுக்கான வேலை செய்யாத மாதாந்திர குறைந்தபட்ச ஊதியமான ரூ. 14,500 ஐ அமல்படுத்துவது. இரண்டு, அனைத்து தொழிற்சாலைகளிலும் தொழிலாளர் பிரதிநிதித்துவத்துடன் இருதரப்பு “தொழிற்சாலை சுகாதார குழுக்களை” (FHC) ஏற்பாடு செய்து செயல்படுத்துவது.

மே 2020 இல் முதலாளிகள் தங்களுக்கு புதிய வேலை ஒப்பந்தங்கள் கிடைக்கவில்லை என்றும் எதிர்வரும் பல மாதங்களுக்கு புதிய வேலை ஒப்பந்தங்கள் வரப்போவதில்லை என்றும், அதனால் அவர்கள் அனைத்து தொழிலாளர்களுக்கும் இடமளிக்க முடியாது என்றும் கூறினர். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தொற்றுநோய் தொடர்பான பிரச்சினைகளில் எந்த ஊழியரையும் பணிநீக்கம் செய்யக்கூடாது என்று முத்தரப்பு பணிக்குழு குழு கொள்கை முடிவை எடுத்தது. அதில், பங்குதாரர்கள் வேலைக்கு அழைக்கப்படாத தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 14,500 வழங்க சமரசம் செய்தனர், அது ஒரு சுழற்சி செயல்முறையாக இருக்க வேண்டும். முதலாளியின் நலனுக்காக இத்தகைய ஊதியக் கொடுப்பனவுகள் மற்றும் வேண்டுமென்றே தவறான புரிதல்களால் தவறிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

தொழிற்சாலை சுகாதார குழுக்களில், தொழிலாளர் பிரதிநிதித்துவத்துடன் தொழிற்சாலை சுகாதார குழுக்களை நிறுவுவதற்கான முடிவை முதலாளிகள் முற்றிலும் புறக்கணித்தாலும், முடிவுக்கு இணங்காததை அனைத்து தொழிற்சாலைகளிலும் “தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குழுக்கள்” இருப்பதாக வாதிடும் தொழிலாளர் அதிகாரிகள் மறைக்க முயல்கின்றனர். அவை ஓரளவு செயலிழந்தவையாக காணப்படுவதுடன் பணியிடங்களில் விபத்துகள் போன்ற அவசரகால சூழ்நிலைகளை மட்டுமே செயற்பட வேண்டும். கோவிட்-19 தொற்றுநோய் தொழில்சார் சுகாதார அபாயமும் இல்லை, அவசரமும் அல்ல. எனவே தொழிற்சாலை சுகாதார குழக்கள் அவசியம்.

மற்ற பிரச்சனை என்னவென்றால், எந்த தொழிற்சாலையிலும் “சமூக இடைவெளியை” நடைமுறையில் பராமரிக்க முடியாது. வெளிப்படையாக, இத்தகைய தொற்றுநோய் தேவைகளை எதிர்பார்த்து அவை வடிவமைக்கப்பட்டு கட்டப்படவில்லை. சுகாதார வழிகாட்டுதல்களுக்கு வளி கட்டுப்பாட்டு சாதனம் அணைக்கப்பட வேண்டும் என்றாலும், ஜவுளி மற்றும் துணிகளுடன் வளி கட்டுப்பாட்டு சாதனத்தை முழுவதுமாக மூட எந்த ஆடை தொழிற்சாலையாலும் முடியாது. ஏனைய தடைகள் என்னவென்றால், எந்தவொரு முதலாளியும் மிகவும் நடைமுறை சிக்கல் காரணங்களுக்காக தங்கள் அனைத்து பணியாளர்களுக்கும் தனித்தனியாக தங்குமிடங்களை வாங்க முடியாது.

ஜனநாயக மற்றும் “உரிமைகள்” அடிப்படையிலான பதில்களின் அவசியம்

சுருக்கமாக, உலக சுகாதார நிறுவனத்தின் அனைத்து வழிகாட்டுதல்களும் நகர்ப்புற நடுத்தர வர்க்க குடியிருப்பாளர்களுக்கானதே தவிர, தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களுக்கானது அல்ல. உள்ளுர் தொழிலாளர்களின் பங்கேற்புடன் தொழிற்சாலைகளுக்கான வழிகாட்டுதல்கள் மறுவடிவமைப்பு செய்யப்படுவதுடன் ஜனநாயக ரீதியாக மீண்டும் உச்சரிக்கப்பட வேண்டும், மேலும் இது இரு-பகுதி தொழிற்சாலை சுகாதார குழுக்களுடன் சாத்தியமாகலாம். முதலாளிகள் பயப்படுகின்றதும் தொழிலாளர் அதிகாரிகள் விட்டுக்கொடுத்ததும் என்னவென்றால், அங்கு தொழிற்சங்கங்கள் மறுக்கப்பட்டு சுதந்திர வர்த்தக வலயங்கள் நிறுவப்பட்ட கடந்த 43 வருடங்களாக கட்டுநாயக்கவில் முதல் தொழிற்சாலை சுகாதார குழுக்கள் தொழிற்சாலைகளில் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வழிவகுக்கலாம் என்பதாகும். முதலாளியின் பேசப்படாத தர்க்கம் என்னவென்றால், ஒழுங்கமைக்கப்பட்ட உழைப்பை ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர்களாக, இலாபத்தை அதிகரிப்பதற்காக சுரண்ட முடியாது.

இவ்வாறு, சிங்கள தெற்கு மற்றும் போரால் பாதிக்கப்பட்ட தமிழ்-முஸ்லீம் வடகிழக்கு வேலைவாய்ப்பு ஆகிய இரண்டின் பொதுவான அம்சம் என்னவென்றால், தொழிற்சங்கங்கள் மற்றும் பேரம் பேசுவதற்கான தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் முற்றிலும் மறுக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றன. வித்தியாசம் என்னவென்றால், வடக்கு மற்றும் கிழக்கோடு ஒப்பிடும்போது சிங்கள தெற்கு இன்னும் இராணுவ பாதுகாப்புக்கு வெளியே உள்ளது.

பாரம்பரிய தோட்டங்களை தவிர்த்து, தனியார் துறையில் தொழிலாளர் படை முழுவதும் அரசியலமைப்பில் அத்தியாயம் ஐஐஐ, உறுப்பு 14 (1) (d) மற்றும் சர்வதேச தொழில் நிறுவனத்தின் ஒப்பந்தங்கள் 87 மற்றும் 98. 1972 மற்றும் 1995 இல் இலங்கை அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட “உரிமைகளுக்கான”, இந்த இரக்கமற்ற மறுப்புக்கு எதிராக எந்த தொழிற்சங்கமும், எந்தவொரு சிவில் சமூக உரிமை அமைப்புகலும் சவால்விடவோ பிரச்சாரம் செய்யவோ இல்லை. நகர்ப்புற சிவில் சமூக உரிமை பிரச்சாரகர்களைப் பொருத்தவரை “தொழிலாளர் உரிமைகள்” என்பது அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாக இருந்ததில்லை.

உண்மை என்னவென்றால், வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும், ஒருங்கிணைந்து பேரம் பேசும் உரிமை சமரசமற்ற அடிப்படை உரிமையாகக் கொண்டுவரப்படாவிட்டால், முதலாளிகளால் அவர்களின் பணியிட பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் ஒருபோதும் கவனிக்கப்படாது. எந்த தொழிற்சாலை சுகாதார குழக்களும் அனுமதிக்கப்படாது என்பதுடன் கோவிட்-19 சிக்கல்களும் நீடிக்கும் அல்லது மோசமடையக்கூடும். எனவே, பணியிடங்களில் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கோவிட்-19 தடுப்பு கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டு பேரம் பேசுவதற்கான கோரிக்கைகளுடன் இணைத்து எழுப்ப வேண்டும். இது தொழிற்சாலை வாழ்க்கையை ஜனநாயகப்படுத்துவது பற்றியது, அது இன்றுவரை தீர்க்கப்படவில்லை.

குசல் பெரேரா

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“வாக்குரிமை : கிராம மக்கள் மேற்கொள்ள வேண்டிய அரசியல் பொறுப்பு”

சுதந்திரத்தின் குரலாக ஒலிக்கும் கிராம மக்களின் வாக்குகள், ஜனாதிபதி தேர்தலில் நாடு முழுவதும் அலைபாய்கின்றன. இந்த வாக்குகள், அரசியலில்...

நடக்காத பிரதேச சபை தேர்தலுக்கு செலவழிக்கப்பட்ட கோடி ரூபாய்கள் 

தேர்தலை நடத்த தேவையான பணத்தை அரசாங்கம் வழங்காத காரணத்தால் பிரதேச சபை தேர்தல் கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. ஆனால் நடக்காத...

சவூதி அரேபியாவின் “VISION 2030”

தற்போதைய சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸுடைய புதல்வரும் சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவசரும் தான்...