பசில் ராஜபக்ஷ வெளிநாடு சென்றிருக்கும் நிலையில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவிக்கு நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக டெய்லி சிலோன் செய்திப் பிரிவு அறிகிறது.
இந்த நியமனம் தொடர்பில் பொதுஜன பெரமுன உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடாவிட்டாலும், நாமல் ராஜபக்ஷ தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலிருந்து நாடு எதிர்நோக்கும் நெருக்கடிகள் குறித்து அண்மைய நாட்களில் அதிகளவான கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.