முறையான கண்காணிப்பின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கையின் ஊடாக நாடு மீண்டும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுவதாக இலங்கை பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களில் அதிகளவான இந்திய சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்ததாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இவ்வாறு நாட்டிற்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகளின் தனிமைப்படுத்தல் நடவடிக்கை உரிய வகையில் கண்காணிக்கப்படுவதில்லை எனவும் இந்த நிலைமையானது மிகவும் அபாயகரமானது எனவும் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.