follow the truth

follow the truth

April, 3, 2025
Homeஉள்நாடுஅனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் இலங்கை வந்தடைந்தார்

அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் இலங்கை வந்தடைந்தார்

Published on

அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் மார்ட்டின் சுன்கொங் நேற்று (11) இலங்கை வந்தடைந்தார்.

ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்ஹ பிரதமராக இருந்தபோது விடுத்த அழைப்பிற்கு அமைய அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகத்தினுடைய இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்று இலங்கையை வந்தடைந்த மார்ட்டின் சுன்கொங்கை பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர்  அங்கஜன் ராமநாதன் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இந்த உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது மார்ட்டின் அவர்கள் ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்ஹ மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாட இருப்பதாக  பாராளுமன்ற செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

அத்துடன் மார்ட்டின் சுன்கொங் அவர்கள், சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்த்தனவையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

அதனையடுத்து, அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம், பாராளுமன்ற சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச ஆகியோரையும் சந்திக்கவிருப்பதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பீடி விலை அதிகரிப்பு

அனைத்து பீடி உற்பத்தி பொருட்களுக்கான புகையிலை வரி இன்று (02) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டு ரூபாயிலிருந்து...

இளம் பெண்களின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்வாணப்படுத்திய ஒருவர் கைது

இரண்டு பெண்களின் நிர்வாண புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் விளம்பரப்படுத்திய இரண்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை...

துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத 42 பேர் குறித்து விசாரணை

உயிர் பாதுகாப்புக்காக வழங்கிய துப்பாக்கிகளை திருப்பித் தருமாறு பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இன்னும் 42 நபர்கள் தங்கள்...