இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது தொடர் நடைபெறவுள்ளது.
இப்போட்டி டுபாய் மைதானத்தில் இன்று இரவு இலங்கை நேரப்படி 07.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி 05 தடவைகளும் பாகிஸ்தான் அணி 02 தடவைகளும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அரையிறுதிச் சுற்றில் ஹொங்கொங் அணியை வீழ்த்திய இலங்கை வலைப்பந்தாட்ட அணி, ஆசிய சம்பியன்ஷிப் வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் இன்று சிங்கப்பூரை எதிர்கொள்கின்றது.
நேற்றைய வெற்றியின் மூலம் இலங்கை அடுத்த வருடம் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள மகளிர் வலைப்பந்தாட்ட உலக சம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.