ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் 2022இன் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தெரிவாகியுள்ளது.
அரையிறுதிப் போட்டியில், 67-43 என்ற கணக்கில் ஹொங்கொங்கை வீழ்த்திய இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
கடந்த 3ஆம் திகதி சிங்கப்பூரில் ஆரம்பமான வலைப்பந்து போட்டிகளின் இறுதிப் போட்டி நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.