follow the truth

follow the truth

November, 30, 2024
Homeஉள்நாடுரயில் பயண சீட்டுக்களுக்கு தட்டுப்பாடு!

ரயில் பயண சீட்டுக்களுக்கு தட்டுப்பாடு!

Published on

ரயில் பயணச் சீட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், குறித்த பற்றாக்குறையை தீர்ப்பதற்காக, முன்னர் அச்சிடப்பட்டு பயன்படுத்தப்படாத பயணச்சீட்டுகளை பயன்படுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக திணைக்களத்தின் வர்த்தக அத்தியட்சகர் வஜிர பொல்வத்த தெரிவித்தார்.

தென் பகுதி ரயில் பாதையில் பயணச்சீட்டுக்களுக்கு தட்டுப்பாடு உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பயன்படுத்தப்படாத பயண சீட்டுக்கள் சேவைக்கு பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரயில் ஆசனங்களை, முன்கூட்டியே ஒதுக்கிக்கொள்வதற்கான கால எல்லை நீடிக்கப்படவுள்ளது.

ரயில் ஆசனங்களை ஒதுக்கிக்கொள்வதற்கான அதியுச்ச காலம், 14 நாட்களாக இருந்தநிலையில் தற்போது, அது 30 நாட்களாக நீடிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வருமான வரி செலுத்துவோருக்கான அறிவித்தல்

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் இன்றுடன்(30) நிறைவடைவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம்...

கரையை கடக்கும் புயல் – மழையுடனான வானிலை குறையும் சாத்தியம்

நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு

சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக வயல் நிலங்கள் சேதமடைந்துள்ள விவசாயிகளுக்கு அவர்களின்...