நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களையும் எதிர்வரும் 13ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(08) தீர்மானித்துள்ளது.
அன்றைய தினம், இது தொடர்பான விடயங்களை முன்வைக்குமாறு சனத் நிஷாந்த உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.