தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டின் கீழ் எரிபொருளைப் பெறும்போது உருவாக்கப்படும் குறுஞ்செய்தியில் எரிபொருள் நிரப்பு நிலையக் குறியீடு இணைக்கப்படவுள்ளது.
அடுத்த வாரம் முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் டுவிட்டரில் இன்று பதிவிட்டுள்ளார்.
தேசிய எரிபொருள் பாஸ் QR ஐ சட்டவிரோதமாக பயன்படுத்துவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அடையாளம் காணப்பட்ட சில விசேட பிரிவினருக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த விஷேட பிரிவினர்களான தனியார் மற்றும் பொதுத்துறையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1) Reviewed the National FuelPass QR system this morning with the development partners & stakeholders. Special Category for quota increases will be tested on selected private & public sector entities this week. Tourist Fuel Pass & Non vehicle category to be introduced next week. pic.twitter.com/9c08TYGoZf
— Kanchana Wijesekera (@kanchana_wij) September 7, 2022