முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க மத்திய மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே மத்திய மாகாண ஆளுநராக லலித் ஏ கமகே செயட்பட்டு வரும் நிலையில் அந்த பதவியில் மாற்றங்கள் வரப்போவதாக ஏற்கனேவே தகவல்கள் கசிந்திருந்தன.
தற்பொழுது செயற்படும் ஆளுநர்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான நவீன் திசாநாயக்க கடந்த பொது தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பக்கம் சென்று பதவியொன்றை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.