follow the truth

follow the truth

November, 23, 2024
Homeஉள்நாடுகோதுமை மா தட்டுப்பாடு 15ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும்?

கோதுமை மா தட்டுப்பாடு 15ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும்?

Published on

தற்போது நிலவும் கோதுமை மா தட்டுப்பாடு, எதிர்வரும் 15ஆம் திகதியின் பின்னர், முடிவுக்கு வரும் என நம்பிக்கை கொள்வதாக, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

துருக்கியிலிருந்து கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், கோதுமை மா கிலோகிராம் ஒன்றின் விலை 450 ரூபா வரையில் அதிகரித்தால், 450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றின் விலையை, 350 ரூபா வரையில் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என சிற்றுணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்கு, அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், தாங்களும், நுகர்வோரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அநுராதபுர மாவட்ட சிற்றுணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க அனுரகுமார, பாண் இறாத்தல் ஒன்றின் விலை தற்போது 240 ரூபாவிலிருந்து, 270 ரூபாவாக அதிகரித்துள்ளதென குறிப்பிட்டுள்ளார்.

நாளைய தினம், கோதுமை மா கிலோ 420 ரூபா வரையில் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அவ்வாறெனின், பாண் இறாத்தல் ஒன்றின் விலை 320 ரூபாவாக அதிகரிக்கும்.

நாளை மறுதினம் கோதுமை மா கிலோகிராம் ஒன்றின் விலை 450 ரூபாவாக அதிகரித்தால், பாண் இறாத்தல் ஒன்றின் விலை 350 ரூபா வரையில் அதிகரிக்கும் நிலை உள்ளதாக அநுராதபுர மாவட்ட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க அனுரகுமார தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க அரச ஊழியர்கள் அர்ப்பணிக்க வேண்டும்

மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்கால தொடர்பில் மக்கள்...

பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்க்க வேலைத்திட்டம்

குறைந்த தரத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவசர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற...

சீன அரசாங்கத்தின் 1996 வீட்டுத் திட்டம் ஒப்பந்தம் கைச்சாத்து

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் வீட்டுத்திட்டத்தின் இணை ஒப்பந்தம்...