சந்தையில் நிலவும் கோதுமை மா தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக பாண் ஒரு இராத்தலின் விலை 300 ரூபா வரை உயரலாம் என ஏற்கனவே பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் அறிவித்திருந்தார்.
ஆனால் இன்று விடயம் தொடர்பான அமைச்சர் நெவில் பெர்ணாண்டோவோடு இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் பாண் விலையை அதிகரிக்காமல் இருக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானத்தித்துள்ளதா அதன் தலைவர் என்.கே ஜயவர்தன அறிவித்துள்ளார்.
அதன் படி இலங்கையின் முன்னணி கோதுமை மா விநியோக நிறுவனங்கள் இரண்டு 50 கிலோ மூட்டை ஒன்றை 13500 ரூபாவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் அறிவித்துள்ளார்.
அத்தோடு நாட்டுக்குள் நிலவும் கோதுமை மா தட்டுப்பாட்டை குறைக்க விரைவில் கோதுமை மா இறக்குமதி செய்யப்படும் என்று அமைச்சர் உறுதி வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் நாட்டுக்குள் கோதுமை மா கருப்பு சந்தை ஒன்று உருவாகியுள்ளது என்றும் அங்கு 13500 ரூபா மூட்டை ஒன்று சுமார் 18500 ரூபா வரைவிற்பனை செய்யப்படுகின்றது என்று பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.