follow the truth

follow the truth

April, 5, 2025
Homeஉள்நாடுகோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை

கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை

Published on

கோதுமை மா உற்பத்தித் திறனை அதிகரிக்குமாறு பாரியளவிலான கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களிடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னிலையில் இன்று காலை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்காலத்தில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கோதுமை மாவுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிப்பது நடைமுறைச் சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் கேள்வியை பூர்த்தி செய்வதற்கு துருக்கி மற்றும் டுபாயிலிருந்து கோதுமை மா இறக்குமதிசெய்ய அங்குள்ள ஏற்றுமதியாளர்களுடன் பேச்சுவார்த்தைகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தட்டுப்பாடு காரணமாக சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களிலும் கூட கோதுமை மாவின் சில்லறை விலை அதிகரித்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் சில்லறை விலை சில்லறை விலை ரூ. 360 – 380 ஆக காணப்படும் நிலையில் மொத்த விலை 350முதல் 400 ரூபா வரை காணப்படுவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் பாரிய மோசடி

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தின் அடிப்படையில் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் பாரிய...

எல்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

எல்பிட்டிய ஊரகஸ்மன்ஹந்திய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலையில்...

சற்றுமுன் இலங்கையை வந்தடைந்தார் இந்தியப் பிரதமர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குழுவினர் சற்று முன்னர் நாட்டை வந்தடைந்தனர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில்...