வெள்ளவத்தை-மாயா ஒழுங்கை பகுதியில் மாடிக் கட்டடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் 12 மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றின் 11 ஆவது மாடியை சுத்தம் செய்யும்போது, ஜன்னல் ஊடாக கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.