கோதுமை மாவின் விலை தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கோதுமை மா மற்றும் அது சார்ந்த பாண் போன்றவற்றின் விலை தொடர்பில் பேக்கரி உரிமையாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது நுகர்வோருக்கு விற்கப்படும் கோதுமை மாவின் விலை தொடர்பில் உற்பத்தி நிறுவனங்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, கோதை மாவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து பாண் 300 ரூபாய்க்கும், ஏனைய சிற்றுணவுகள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.