follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுதகவல் அறியும் உரிமைக்கு புதிய அணுகுமுறை!

தகவல் அறியும் உரிமைக்கு புதிய அணுகுமுறை!

Published on

தகவல்களை துரிதமாக வழங்க அரச நிறுவனங்களில் செயல்திறன்மிக்க நடைமுறை அரச நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக புதிய அணுகுமுறையொன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தகவல் பெறுவதற்காக விண்ணப்பப் படிவத்தை அனுப்பும் போது முகவரியுடன், தொலைபேசி இலக்கம், வட்ஸ்அப் இலக்கம், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றையும் குறிப்பிடுமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு, விண்ணப்பதாரிகளைக் கோரியுள்ளது.

கடிதங்கள் மூலம் கோரப்படும் தகவல்களை அனுப்புவதில் ஏற்படக்கூடிய காலதாமதத்தைத் தவிர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கிடையில் இன்று  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

பொதுமக்களின் வசதிக்காக செயற்படுவது அனைத்து அமைச்சுக்களினதும் அரச அதிகாரிகளினதும் தலையாய பொறுப்பாகும்.

எனவே எந்தவொரு நபருக்கும் இடையூறு ஏற்படாத வகையில், செயல் திறன்மிக்க சேவையை வழங்க வேண்டும்.

இதன் மூலம் அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் முறையான பதில் அளிக்கும் வேலைத்திட்டத்தை உருவாக்குவது கட்டாயம் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி செயலகத்திடம் இருந்து தகவல்களைக் கோரும் போதும் இந்த செயல்முறையைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (சட்டம்) சிசிர ஹேனாதிர, தகவல் அதிகாரியாக செயற்பட்டு வருகின்றார்.

அத்துடன் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கலாநிதி சுலக்சன ஜயவர்தன பதில் அதிகாரியாக செயற்படுகின்றார்.

பின்வரும் இலக்கங்கள் ஊடாக தகவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

சிசிர ஹேனாதீர – ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (சட்டம்)

கைபேசி இலக்கம் – 0718132590

அலுவலக இலக்கம் – 0112354329 / 0112354354

கலாநிதி சுலக்சன ஜயவர்தன – ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்

கைபேசி இலக்கம் – 0719994133 / 0711992354

அலுவலக இலக்கம் – 0112354329 / 0112354354

மின்னஞ்சல் முகவரி – addlsec.fsd@presidentsoffice.lk

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...