போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக அபிப் ஹொசைன் 39 ஓட்டங்களையும், மெஹிதி ஹசன் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் சாமிக்க கருணாரத்ன 32 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹசரங்க 40 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இந்நிலையில் 184 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அணிசார்பில் அதிகபடியாக குசல் மெண்டிஸ் 60 ஓட்டங்களையும், தசுன் சானக்க 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் பங்களாதேஷ் அணியின் எபடோட் ஹொசைன் 51 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.