ஆசிய கிண்ணத்துக்காக இன்று இடம்பெற்ற இந்திய அணிக்கும் ஹொங்கொங் அணிக்கும் இடையிலான ஆட்டத்தில் இந்திய அணி 40 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கட் இழப்புக்கு 192 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் சூரியகுமார் யாதவ் 68 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதனையடுத்து 193 என்ற இலக்கை நோக்கி துடுப்பாடிய ஹொங்கொங் அணி 20 ஓவர்களில் 5 விக்கட் இழப்புக்கு 152 ஓட்டங்களை பெற்றது.