நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீதிகளில் அத்தியாவசிய காரணங்கள் இன்றி பயணம் செய்பவர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண வலியுறுத்தியுள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு நீடிப்பு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் டெல்ட்டா வைரஸ் திரிபு வேகமாக பரவி வருவதன் காரணமாக பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை கடைபிடித்து வீடுகளிலேயே இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.