follow the truth

follow the truth

February, 21, 2025
Homeஉள்நாடுபயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க தென்னிலங்கை அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க தென்னிலங்கை அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை

Published on

கடந்தகால தவறுகளை உணர்ந்து பயங்கரவாத தடைச்சட்டத்தை உளப்பூர்வமாக நீக்க தென்னிலங்கை அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடக அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கொடுமையை இன்றளவிலும் தமிழ் மக்கள் அனுபவித்து வருகின்ற நிலையில், அந்த சட்டம் ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கும் நாட்டின் இதர பகுதியினரையும் விட்டுவைக்கவில்லை என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தை இப்பொழுது நடைமுறைப்படுத்துவது சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்றும், உலக நாடுகளிடமிருந்து இலங்கை தனிமைப்பட்டு விடும் என்றும் இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ் கூறியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, நாட்டை முன்னேற்ற விரும்பினால், கடந்தகால தவறுகளை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு, அதனை நிவர்த்தி செய்ய இலங்கை அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்தின் மீதும் மனித உரிமைகள் மீதும் அக்கறை கொண்டவர்களும், அமைதி, சமாதானத்தை விரும்பக்கூடிய எவரும் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான சட்டத்தை ஏற்க மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் ஊழல் மலிந்த அரசுகளை காப்பாற்றிக்கொள்வதற்காக இவ்வாறான சட்டங்கள் எந்த வடிவத்தில்  முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட வேண்டும் என  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வித்யா படுகொலை வழக்கு – முன்னாள் DIGக்கு கடூழிய சிறைத்தண்டனை

வித்யா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரை ஆரம்பத்தில் விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா...

அக்குரெஸ்ஸ ‘ஒலு தொல’வை சுற்றுலாத் தலமாகப் பயன்படுத்துவது குறித்து அவதானம்

மாத்தறை மாவட்டத்தின் அகுரெஸ்ஸவில் உள்ள 'ஒலு தொல'வை சுற்றுலாத் தலமாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, அக்குரெஸ்ஸ பிரதேச செயலகம்,...

நாட்டின் பல பகுதிகளில் நாளையும் கடும் வெப்பம்

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அடுத்த 24 மணி நேரத்திற்குக் கவனம் செலுத்த வேண்டிய...