ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி இதுவரை 180 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மாதத்தில் மாத்திரம் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், சுமார் 250 பேர் காயமடைந்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 3100 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இயற்கை அனர்த்தத்தையும் எதிர்நோக்கியுள்ள தமது நாட்டிற்கு சர்வதேச ஒத்துழைப்புகளை தலிபான்கள் கோரியுள்ளனர்.