இலங்கையின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கு சீனா எப்போதும் சர்வதேச ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மீறப்படுவதை சீனா ஒருபோதும் சகித்துக் கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் யுவான் வாங் 5 கப்பல் விவகாரம், சீனா மற்றும் இலங்கையால் முறையாக தீர்க்கப்பட்டதாக இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong தெரிவித்துள்ளார்.