பிரதமர் அலுவலகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பலாங்கொட காஷ்யப்ப தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காஷ்யப்ப தேரர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.