மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்குத் தேவையான மண்ணெண்ணெயை பெற்றுக் கொடுப்பதற்காக, சலுகைத் திட்டமொன்றை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் காலங்களில் மண்ணெண்ணெயை பெற்றுக் கொள்வதில் சலுகை வசதி கிடைக்குமென அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம்(21) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் ஒரு லீட்டர் மண்ணெண்ணெயின் விலை 253 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 340 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாட்டின் பல்வேறு தரப்பினரும் அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
இலங்கையில், மாதாந்தம் 19 மெட்ரிக் தொன் மண்ணெண்ணெய்க்கான தேவை காணப்படுகின்றது.
நாட்டு மக்களுக்கான மண்ணெண்ணெய் தேவையானது, சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் கிளைச் சேவையாக பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.