நாட்டில் இதுவரை இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டோரின் எண்ணிக்கை 10 மில்லியனை கடந்துள்ளது.
நேற்று(09) வரையிலான தரவுகளின் படி 10,211,537 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 870 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 2 இலட்சத்து ஆயிரத்து 834 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்;டதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
9 ஆயிரத்து 778 பேருக்கு அஸ்ட்ராசெனகா முதலாம் தடுப்பூசியும், 669 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன. 13 ஆயிரத்து 40 பேருக்கு மொடெர்னா இரண்டாம் தடுப்பூசியும், 30 பேருக்கு முதலாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
அதேவேளை 14 ஆயிரத்து 279 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 507 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
ஸ்புட்னிக்-வி முதலாம் தடுப்பூசி ஒருவருக்கு செலுத்தப்பட்டதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.