மருந்து கம்பெனி உரிமையாரின் மனைவியை மிரட்டி 200 கோடி ரூபா பணம் பறித்த வழக்கில் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ்ஸின் சொத்துகளை இந்திய அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கியிருந்தது.
சுகேஷ் சந்திரசேகர் மோசடியான முறையில் பெற்ற பணத்தில் கோடிக்கணக்கான ரூபாவை பொலிவூட் நடிகைகளுக்கு செலவு செய்துள்ளதாகவும் சுகேஷ் சந்திரசேகருடன் நெருக்கமான தொடர்பில் இருந்த இலங்கை பின்னணியை கொண்ட நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சில பரிசுப் பொருள்களைப் பெற்றமையும் விசாரணைகளில் தெரியவந்தது.
இந்நிலையில் வழக்கில் புதிய திருப்பமாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார்.