களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை(10) முதல் 18-மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாளை(10) காலை 08:00 மணி முதல் எதிர்வரும் சனிக்கிழமை(11) அதிகாலை 02:00 மணி வரை இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வாத்துவ, வஸ்கடுவ, பொதுபிட்டிய, களுத்துறை (தெற்கு மற்றும் வடக்கு), கடுகுருந்த, நாகொட, பெந்தோட்ட, பயாகல, பொம்புவல, மக்கொன, பேருவளை, தர்கா நகர், அளுத்கம, பிளமினாவத்த, கலுவாமோதர, மொரகல்ல ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.