சைனோபாம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படுகின்றவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு மூன்றாவது டோஸ் வழங்கப்படுமாயின் அதற்காக அஸ்ட்ராசெனெக்கா, பைசர் அல்லது மொடேர்னா ஆகிய தடுப்பூசிகளை செலுத்துமாறு இலங்கை மருத்துவ சங்கம் பரிந்துரை செய்துள்ளது.
ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பரிசோதனைகளிலும் அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருப்பதாகவும் சைனோபாம் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 7 வீதமானோருக்கு அந்த நிலைமை இல்லை என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த பரிசோதனையை அடிப்படையாக கொண்டு 18 முதல் 60 வயதுக்கிடைப்பட்ட தீவிர நோய் அல்லாதவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியை வழங்குமாறு இலங்கை வைத்திய சங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.