follow the truth

follow the truth

April, 15, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாகோட்டாபய தங்கியிருந்த சிங்கப்பூர் விடுதிக்கான கட்டணம் 67 மில்லியன் ரூபா?

கோட்டாபய தங்கியிருந்த சிங்கப்பூர் விடுதிக்கான கட்டணம் 67 மில்லியன் ரூபா?

Published on

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபாவை ஹோட்டல் கட்டணமாக செலுத்தியதாக தகவலறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் கடந்த 11ஆம் திகதி தாய்லாந்து செல்லும் வரை சிங்கப்பூரில் உள்ள மரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

ஹோட்டலின் தங்குமிட கட்டணமாக செலவிடப்பட்ட 67 மில்லியன் ரூபாவை அவன்ட் கார்ட் நிறுவனத்தின் உரிமையாளர் நிஷ்ஷங்க சேனாதிபதி செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, எவ்வாறாயினும், தற்போது தாய்லாந்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி, அந்நாட்டிலுள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கு தாய்லாந்து அரசாங்கத்திடம் அனுமதி கோரிய போதிலும், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தங்கியிருக்கும் ஹோட்டல் வளாகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என தாய்லாந்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தாய்லாந்தின் பேங்காக் போஸ்ட் செய்தித்தாள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷாத் – அதாவுல்லா சகாக்கள் சம்மாந்துறையில் மோதல்

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் போது மோதல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்...

ஆண், பெண் ஆகிய பாலினங்களை தாண்டி இன்னொன்றும் இணைகிறது… விண்ணப்பப் படிவம் இதோ..

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்பை வழங்கும்போது பாலினத்துடன் மேலதிகமாக 'மற்றவை' என்ற மற்றொரு வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சொத்து மற்றும் பொறுப்பு...

பிள்ளையானுடன் கதைக்கக் கோரிய ரணிலின் கோரிக்கைக்கு CID மறுப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உடன் உரையாடுவதற்கான...