நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் பேலியகொடை மெனிங் விற்பனை நிலையம் என்பன நாளை மற்றும் நாளை மறுதினம் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த விற்பனைக்காக மாத்திரம் இவ்வாறு பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் பேலியகொடை மெனிங் விற்பனை நிலையம் என்பன திறக்கப்படுவதாக கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.