போதைப்பொருள் கடத்தலின் பிரதான சந்தேநபரான ‘பொப் மாலி’ என அழைக்கப்படும் சமிந்த தாப்ரவ்வை கைதுசெய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி பேருவளை கடற்பரப்பில் 288 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் 5 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் இருந்து செயற்பட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ள நியைில், அவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதற்கமைய, களுதுர சமிந்த தாப்ரேவ் என்ற இயற்பெயரை உடைய, ‘பொப் மாலி’ என அழைக்கப்படும் குறித்த சந்தேகநபரை கைதுசெய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
குறித்தக் சந்தேகநபர் தொடர்பில் தகவல்கள் தெரிந்திருப்பின் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் உதவிப் பணிப்பாளரின் 071-8592727 அல்லது 011-2343334 என்ற இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.