குரங்கு அம்மை தொற்றானது உலகின் 75 நாடுகளில் தீவிரமாக பரவியிருப்பதால் உலக சுகாதார ஸ்தாபனமானது அவசர நிலைமையினை பிரகடனம் செய்துள்ளது.
அமெரிக்காவிலும் குரங்கு அம்மை தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக அமெரிக்க அரசும் சுகாதார அவசர நிலைமையினை பிரகடனம் செய்துள்ளது.
உலக நாடுகள் குரங்கு அம்மை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொள்ளவும் இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அமெரிக்காவில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.