அண்மைய போராட்டங்களின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான கைதுகளை தமது கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும், அரசாங்கமானது அடக்குமுறைகளை கைவிட்டுவிட்டு இந்த அவல நிலையிலிருந்து நாட்டையும், மக்களையும் காப்பாற்ற முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ஒழுங்கினை கடைப்பிடிப்பதன் மூலமே சர்வதேச உதவிகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.