மெக்ஸிகோவின் தென்மேற்கில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சான் மார்கோஸின் வடமேற்கில் 23 மைல் (37 கிமீ) தொலைவில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெப்லோமாடரோ மெக்சிகோவின் முக்கிய சுற்றுலா தலமாகும். நிலநடுக்கத்தால் இந்த நகரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மெக்ஸிகோ தலைநகரின் சில பகுதிகளில் கிட்டத்தட்ட ஒரு நிமிடம் நிலம் அதிர்ந்தது. சேதம் குறித்த ஆரம்ப அறிக்கைகள் எதுவும் வெளிவரவில்லை.