இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் 22ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான F 42-44/61-64 பிரிவு தட்டெறிதல் போட்டியில் எச்.ஜீ. பாலித்த வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
தட்டெறிதல் போட்டியில் F42-44 பிரிவில் பங்குபற்றிய அவர் 44.20 மீற்றர் தூரத்திற்கு தட்டை எறிந்து இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.