இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் 22ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.
இதன் மூலம் 92 வருட பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு முதலாவது பதக்கத்தை வென்று கொடுத்த வரலாற்றுச் சாதனையை யுப்புன் அபேகோன் தனதாக்கிக்கொண்டார்.
அத்துடன் 24 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு மெய்வல்லுநர் போட்டியில் பதக்கம் ஒன்று கிடைத்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.