follow the truth

follow the truth

January, 15, 2025
Homeஉள்நாடுஅன்று இந்தியாவுடன் இணைந்திருந்தால் இன்று எரிபொருள் வரிசை இருந்திருக்காது - ஜனாதிபதி

அன்று இந்தியாவுடன் இணைந்திருந்தால் இன்று எரிபொருள் வரிசை இருந்திருக்காது – ஜனாதிபதி

Published on

ஒவ்வொரு நாளும் வெளிநாடுகளிடம் கடன் வாங்கி நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது. எனவே கடன் வாங்கும் எல்லையை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

நாடாளுமன்றில் ஆற்றிவரும் அக்கிராசன உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், முன்னைய அரசாங்கம் திருகோணமலை எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய முற்பட்டபோது பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை இந்தியாவுக்கு விற்பனை செய்வதாக தெரிவித்து அந்த திட்டத்தை கைவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர்.

அன்று அந்த அபிவிருத்தி நடவடிக்கை இடம்பெற்றிருக்குமானால் இன்று எரிபொருள் வரிசைகள் இருந்திருக்காது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும், சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைகளை ஆரம்பிக்கும் போதும் அப்போதைய எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை இட்டன. இதனூடாக பல மரணங்கள் நிகழும் எனவும் குறிப்பிட்டனர். ஆனால் நாங்கள் அதை தைரியமாக முன்னெடுத்தோம். அதனூடாக இன்று பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

எனவே, நல்ல திட்டங்கள் முன்னெடுக்கும் போது அவற்றை வரவேற்க வேண்டியது நம் அனைவரினதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த ஆண்டில் நாட்டின் மொத்த சுற்றுலாத்துறை வருமானம் 53.2% ஆக அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த சுற்றுலாத்துறை வருமானம் 53.2% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 2023 ஆம்...

வடக்கின் கடற்றொழில் பிரச்சினை தொடர்பான விசேட கலந்துரையாடலுக்கு தமிழகத்தின் இணக்கம்

வடமாகாண மீனவர் பிரதிநிதிகளும், தமிழக முதலமைச்சர் எம். கே. ஸ்டாலின் இடையே பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வடக்கின் மீனவப் பிரச்சினை...

வெலே சுதா உட்பட மூவருக்கு கடூழிய சிறை

போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் கம்பொல விதானலாகே சமந்த குமார எனப்படும் வெலே சுதா, அவரது மனைவி மற்றும்...