காலி ரத்கம கம்மெத்தேகொட பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த சூட்டுச்சம்பவத்தை நிகழ்த்தியுள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 48 வயதுடைய நபர் எனவும், காயமடைந்த ஏனைய மூவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ரத்கம பொலீஸார் மேலும் தெரிவித்தனர்.