22 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 40,000 மெற்றிக் தொன் அரிசி, 500 மெற்றிக் தொன் பால்மா மற்றும் 100 மெற்றிக் தொன் மருந்துப் பொருட்கள் போன்ற மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு வழங்கிய பொருட்களை இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை அரசிடம் கையளித்துள்ளது.
இந்த நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றதோடு, குறித்த பொருட்களை இந்திய உயர்ஸ்தானிகர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.