மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமை குறித்த பயணத்தடையினை எதிர்வரும் ஒக்டோபர் 26 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோனினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி டி சில்வாவினால் விசாரனைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.