வெற்றிடமாகி இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் வெற்றிடமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தன பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி வஜிர அபேவர்தன பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.