கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நள்ளிரவில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஆழ்ந்த கவலையும் கண்டனமும் வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹுல்டன் தெரிவிக்கையில்,
காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இருந்து வரும் செய்திகள் குறித்து மிகவும் கவலையடைகிறேன். அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகின்றோம் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹுல்டன் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கனேடிய உயர்ஸ்தானிகர் தெரிவிக்கையில்,
காலி முகத்திடல் போராட்டக் களத்தில் ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. அதிகாரிகள் நிதானத்துடன் செயல்படுவதும் வன்முறையைத் தவிர்ப்பதும் முக்கியம் என கனேடிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.