ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணியின் தலைவர் பதவியில் இருந்து மயந்த திசாநாயக்க இராஜினாமா செய்துள்ளார்.
இந்த இராஜினாமா கடிதம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
கட்சியுடன் எதிர்கால வேலைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.