அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 368. 90ரூபாவாகவும் கொள்முதல் விலை ரூ. 358.53ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்துள்ளது.