இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பாகிஸ்தான் அணி 4 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன் அடிப்படையில் தனது முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் தினேஸ் சந்திமால் அதிகபட்சமாக 76 ஓட்டங்களையும் மஹீஷ் தீக்ஷன 38 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் ஷஹீன் அப்ரிடி 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹசன் அலி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 218 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜயசூரிய 5 விக்கெட்களையும் ரமேஷ் மென்டிஸ் மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.
துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் அணித்தலைவர் பாபர் அஸாம் 119 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
அதனடிப்படையில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி 4 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.
பதிலுக்கு தமது இரண்டாவது இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 337 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 94* ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 76 ஓட்டங்களையும் மற்றும் ஓசத பெர்ணான்டோ 64 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் மொஹமட் நவாஸ் 88 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
அதனடிப்படையில் பாகிஸ்தான் அணிக்கு 342 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பதிலுக்கு தமது இரண்டாவது இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட்களை இழந்து 344 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் அப்துல்லா சாபீக் ஆட்டமிழக்காமல் 160 ஓட்டங்களையும் அணித்தலைவர் பாபர் அஸாம் 55 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.