அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை இயக்கும் வணிக நிறுவனங்களுக்கு வாகனங்களை பதிவு செய்ய தனி அமைப்பை வழங்க எரிசக்தி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி அனைத்து வாகனங்களும் வணிகப் பதிவு எண்ணுடன் பதிவு செய்யப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அந்த வணிக நிறுவனங்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கும் வகையில் தேசிய எரிபொருள் உரிமம் அடுத்த சில நாட்களில் மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தந்த வாகனங்களுக்கு பிரத்யேக QR குறியீடும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.