வாகன ஓட்டுநர்களுக்கு வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் ‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ (பாஸ்) அறிமுகப்படுத்தப்பட்டவுள்ளது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் எனவும் அதற்கமைய ஒரு தேசிய அடையாள அட்டை எண்ணின் கீழ் ஒரு வாகனம் பதிவு செய்யப்படவுள்ளதுடன், வாகனத்தின் சேஸ் எண் மற்றும் ஏனைய விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் QR குறியீடு ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
QR குறியீட்டைப் பயன்படுத்தி வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தின் 2 நாட்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இன்று நண்பகல் 12.30 மணிக்கு இதுதொடர்பான மேலதிக விவரங்கள் வெளியிடப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Introduction to the National Fuel Pass will be held @ 12.30pm. A guaranteed weekly fuel quota will be allocated. 1 Vehicle per 1 NIC, QR code allocated once Vehicle Chassis number & details verified. 2 days of the week according to Last Digit of number plate for fueling with QR. https://t.co/hLMI9Nm5ZF
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 16, 2022