ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இந்தநிலையில் ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதத்தை பெற்றுக்கொண்டதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும் சில சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதால் அந்தக் கடிதம் இன்னும் வெளியிடப்படவில்லை என்று என்று சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.