follow the truth

follow the truth

December, 19, 2024
Homeஉள்நாடுஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் இதுவரை கிடைக்கவில்லை என்கிறார் சபாநாயகர்

ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் இதுவரை கிடைக்கவில்லை என்கிறார் சபாநாயகர்

Published on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தமது பதவியிலிருந்து விலகுவதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவரதன அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனினும், ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

தமது பதவியிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விலகினால், எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.

ஜனாதிபதி பதவி வலிகினால், எதிர்வரும் 19ஆம் திகதி அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே வேட்புமனு கோருவதற்கும், 20ஆம் திகதி வாக்கெடுப்பை நடத்துவதற்கும் குறித்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் திட்டமிடப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கிய அகதிகள் படகு திருகோணமலைக்கு

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கிய மியன்மார் அகதிகளை கொண்ட நாட்டுப்படகை திருகோணமலைக்கு கொண்டு செல்ல கடற்படையினர் நடவடிக்கைகளை...

பிரதான பாதையில் ரயில் சேவையில் தாமதம்

கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த புகையிரதமொன்று இன்று (19) மாலை ரம்புக்கனை புகையிரத நிலைய அருகே...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை நாளை கூடுகிறது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாளை (20) கூடவுள்ளது. இது தொடர்பான...