ஆறு மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக நியூசிலாந்தில் கொரோனா தொற்று காரணமாக முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
உடல்நிலை மோசமடைந்த 90 வயதான பெண் ஒருவர், இதய நோய் இருந்துள்ளதாகவும் வென்டிலேட்டர் உதவியின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நியூசிலாந்து சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 16ஆம் திகதிக்குப் பிறகு, நியூசிலாந்தில் பதிவு செய்யப்படும் முதல் கொரோனா உயிரிழப்பு இதுவாகும்
இதேவேளை நியூஸிலாந்தில் கொரோனா தொற்றினால் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனினும், மிகத் தீவிரமாக பரவலடையும் டெல்டா பிறழ்வு தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் சமிக்ஞைகள் தென்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய அலையில் கடந்த வார இறுதியில் 84 பேருக்கு உச்சபட்சமாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இவ்வார இறுதியில் அந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.